2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: பொன்.ராதாகிருஷ்ணன்

George   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என தான் நம்புவதாக இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு வருவதும் அவர்களின் படகுகள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருப்பது குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினேன். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரினேன்.

ஏற்கனவே தான் இது குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் விளக்கினார். உடனடியாக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை வெளிவிவகார அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

மேலும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடி முயற்சியாலும், வெளிவிவகார அமைச்சரின் முயற்சியாலும் உடனடியாக இது நடக்கும் என்று நம்புகிறேன்.

தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நீண்ட கால தீர்வு திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவித்தார்கள்.

ஆழ் கடலில் மீன்பிடித்தல் மற்றும் மீன் உற்பத்தியை பெருக்கவும் மின் பிடிப்புக்குரிய புதிய தேவைகளை உணர்ந்து பல கோணங்களில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்பதனைகூறினார்.

நிரந்தர தீர்வு ஏற்படும் வரை இடைக்கால தீர்வுக்கு நமது அரசு முயல வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தபோது, அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார். எனவே அதிவிரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என நம்புகிறேன் எனஅந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .