2021 மே 06, வியாழக்கிழமை

இடைக்கால பட்ஜெட் இன்று

Thipaan   / 2015 ஜனவரி 28 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா திபான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம்  நாடாளுமன்றத்தில், இன்று வியாழக்கிழமை (29) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும். பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிப்பார்.  

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த இடைக்கால  வரவு- செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இடைக்கால வரவு- செலவு திட்டத்தின் ஊடாக 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக, கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சராக பதவியேற்றபோது, ரவி கருணாநாயக்க கூறியிருந்தார்.

அரசி, பருப்பு, மா, சீனி, பால்மா, டின்மீன் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுவதுடன் இந்த இடைக்கால பட்ஜெட் நிவாரண பொதியாக இருக்கும் என்று அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .