2021 மே 06, வியாழக்கிழமை

பிரதியமைச்சரின் கடவுச்சீட்டை கைப்பற்றுமாறு உத்தரவு

Kanagaraj   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள்  பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் கடவுச்சீட்டை கைப்பற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர், கடந்த 2006ஆம் ஆண்டில் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 107 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே, அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு அவ்வாணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைக்கு இணங்கவே கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் அவரது கடவுச்சீட்டை கைப்பற்றுமாறு உத்தரவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .