2021 மே 06, வியாழக்கிழமை

சுதந்திர தினத்தன்று மூடப்படும் வீதிகள்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

67 ஆவது சுதந்திர தினமான 4ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர தின பிரதான வைபவம் இடம்பெறும் நாடாளுமன்ற மைதானத்தை சுற்றியுள்ள வீதிகளில் சில வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

காலை 6 மணி முதல் 11 மணி வரையில் மட்டுமே இந்த வீதிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தலைமையகம் அறிவித்துள்ளது.  

இதற்கமைய, கிம்புலாவல சந்தியிலிருந்து கியான்ஹேம் சுற்றுவட்டம் வரை ஐப்பான் நட்புறவு வீதி, பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றம் பக்கமாக செல்லும் நாடாளுமன்ற வீதி, ஹட்டன் நெஷனல் வங்கியிலிருந்து கியான்ஹேம் சுற்றுவட்டம், டென்சில் கொப்பேகடுவை மாவத்தை மூடப்படவுள்ளன.

அத்துடன், பெலவத்த சந்தியிலிருந்து கியான்ஹேம் சுற்றுவட்டம் பெலவத்த வீதி மற்றும் நாடாளுமன்ற விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக உள்ள வீதி ஆகியனவே இவ்வாறு மூடப்படவுள்ளன.

இந்த காலப் பகுதியில் மாற்று வீதிகளை உபயோகிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .