Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை ஆரியபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் பெய்த கனமழையின்போது, வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக நேற்று வீட்டில் வசிப்பவர்கள், கொழும்பில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில் இரவு 8 மணியளவில் நீடித்த மழையின்போது வீட்டின் பின்னால் கட்டப்பட்ட பாதுகாப்புச் சுவர் இடிந்து அவ்வீட்டின் மீது விழுந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததால், குறித்த வீட்டின் இரண்டு அறைகள் மற்றும் சமையலறை பலத்த சேதமடைந்துள்ளன.
பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததால், வீட்டில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடைமைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், நோர்வூட் பகுதியில் பெய்த கனமழையால் வடிகாலமைப்புகள் அடைபட்டதால், மழைநீர் நோர்வூட் நகரத்துக்குள் பாய்ந்ததில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
கனமழையைத் தொடர்ந்து, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சில பகுதிகளில் பல வீடுகளும் நிலச்சரிவுகளால் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
50 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago