2021 மே 06, வியாழக்கிழமை

சீனாவின் சிறப்பு தூதுவர் இலங்கை வருகிறார்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம், கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையிலேயே இலங்கையுடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவும், தனது திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்துப் பேச்சு நடத்தவுமே, சிறப்புத் தூதுவர் ஒருவுரை சீன அரசாங்கம் இங்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .