2021 மே 06, வியாழக்கிழமை

கொள்ளை குழுவின் தலைவன் கைது

George   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என கூறி வயோதிபர்களின் தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்த கொள்ளை குழுவின் தலைவனை மாலம்பே பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவை சேர்ந்தவர்கள், வயோதிபர்களை தம்மிடம் அழைத்து, அவர்களை சோதனை செய்ய வேண்டுமென தமது தலைவன் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.

பின்னர் முச்சக்கரவண்டியிடம் அழைத்து சென்று, வயோதிபர்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை பொலீத்தின் பைக்குள் போடுமாறு கூறியுள்ளார்.

பின்னர் அந்த நகை மற்றும் பணத்தை சோதனை செய்ய வேண்டும் என கூறி அதனை எடுத்து சென்று விடுவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 60ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குழுவை சேர்ந்த 7 பேரும் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .