2021 மே 06, வியாழக்கிழமை

லொறி விபத்தில் நால்வர் பலி: 13 பேர் காயம்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மதவாச்சியில் இடம்பெற்ற லொறி விபத்தில் ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் நால்வர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிக்கொண்டு சென்றபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தண்டவாளங்களுக்குள் நசுங்குண்ட நிலையிலேயே அந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .