2021 மே 08, சனிக்கிழமை

ஜனாதிபதி – டக்ளஸ் சந்திப்பு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், நேற்று செவ்வாய்க்கிழமை (10) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற நாளாந்த பிரச்சினைகள் மற்றும் சமகால, எதிர்கால அரசியல் நிலவரங்கள் என்பன குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

ஏற்கெனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் 16 கோரிக்கைகளை முன்வைத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் கலந்துரையாடியிருந்த நிலையிலேயே நேற்றைய சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான இக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா,  செயலாளர் நாயகத்தின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X