2021 மே 15, சனிக்கிழமை

அதாவுட எம்.பி ரூ. 8 இலட்சம் நட்டஈடு செலுத்தினார்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறக்காபொல, கொஹொம்பதெனிய பிரதேசத்தில் குடிநீர் செயற்றிட்டத்துக்கு இடையூறு விளைவித்து நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்தாவுட செனவிரத்ன 8 இலட்சம் ரூபாவை நட்டஈடாக செலுத்தினர்.


இந்த வழக்கில் அவர் உள்ளிட்ட 19 பேர்  பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த வழக்கு வறக்காபொல நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே நட்டஈட்டை செலுத்துவதற்கு பிரதிவாதிகள் இணக்கம் தெரிவித்தனர்.


 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதனால் குடிநீர் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .