2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

ஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள

Kanagaraj   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் சர்வதேச விசாரணை அறிக்கையை சில மாதகாலம் தாமதப்படுத்துமாறு கோரவிருக்கின்றேன் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி நாட்களே ஆகின்றன. இந்த விவகாரம் தொடர்பில் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு காலஅவகாசம் தேவைப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

வொசிங்டனில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இக்  குற்றச்சாட்டுகளை கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த கால அவகாசம் கோரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமாதான அறக்கொடையில் உரை

இதேவேளை, சர்வதேச சமாதான அறக்கொடையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற வைபத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில்,

பின்நோக்கிய ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்ட எமது நாட்டின் வரலாற்றில் இருந்து இலங்கையின் மக்கள் வெளியுலகத்தின் செயல் விளைவுகளின் தொடர்ச்சியான உள் உறிஞ்சலை வரவேற்றுள்ளதுடன் எமது நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள நாடுகளுடனான தொடர்புகளை பேணி வைத்திருந்துள்ளனர்.

1948ஆம் ஆண்டில் சுதந்திரத்தை பெற்றதன் பின்னர் இலங்கையானது உலகத்துடன் தனது தொடர்பை முன் எடுத்து சென்றுள்ளதுடன் 'யாபேருடனும் நட்புறவை பேணுதலும் எவருடனும் பகைமை பாராட்டாமல் இருத்தலும்' என்ற அடிப்படையிலான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை பின்பற்றுவதில் பெருமை அடைந்துள்ளது.

கடல் சட்டம் பற்றிய மாநாடு, ஆயுதக்களைவு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கி விதிமுறைகள் வகுத்தல் நடைமுறைகளில் முன்னணியை வகுத்து பல்வேறு திறன்களில் ஐக்கிய நாடுகள் சபை முறைமைக்கு தொடர்ச்சியான பங்களிப்பை செய்துள்ளதுடன் இற்றை வரைக்கும் சமாதானத்தைப் பேணும் செயற்பாடுகளுக்கான  பங்களிப்பை தொடர்ந்தும் செய்து கொண்டுடிருக்கின்றது.

எனவே சிறப்பாக விபரிக்குமிடத்து இந்த சரியான பாதையில் இருந்தான விலகல் விடயமாக விபரிக்கத்தக்கதும் சில ஆண்டுகளாக பாரம்பரிய வெளிநாட்டுக் கொள்கையிலிருந்து இலங்கையின் குணவியல்பிற்கு மாறான விடயமாகலிருந்தது. தற்போது இலங்கை உலக சமூகத்துடன் தனது ஈடுபாட்டை புதுப்பிப்பதற்கு நாட்டம் கொண்டுள்ளது.

நாளைக்கு இராஐங்க செயலாளரை நான் சந்திக்கும் போது அவரை இலங்கைக்கு விஜயம் புரியுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
எனவே சனாதிபதி சிறிசேன அவர்களினதும் பிரதம அமைச்சர் விக்கிரமசிங்க அவர்களினதும் அரசாங்கமானது சர்வதேச சமூகத்துடன் புதுப்பி;க்கப்பட்ட ஈடுபாட்டுக் கொள்கை ஒன்றை பின்பற்றுகின்றது. உலகை ஓர் அச்சுறுத்தலாக கருதாமல் ஓர் வாய்ப்பாகவே நோக்குகின்றதும்  நாம் இலங்கை மக்களின் மேம்பாட்டிற்கு உலகம் வழங்க கூடிய அதிசிறந்த நலங்களை பெற்று கொள்வதன் பொருட்டு உலகத்தை அரவணைத்து எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். இலட்சியத்;தை அடிப்படையாக கொள்ளாமல் எமது மக்களின் தேவைகளின் மீதான அடிப்படையில் எமது வெளிநாட்டுக் கொள்கையானது ஓர் பகுத்தறிவுக்கு ஏற்ற வெளிநாட்டு கொள்கையாக இருக்கும்.

அரசாங்கமானது 100 நாள் திட்டத்தை வாக்குறுதியளித்துள்ளதன் பிரகாரம் நடைமுறை படுத்துவதிலும் உலகத்துடனான தனது தொடர்பை புதுப்பிப்பதற்கான முயற்சிகளிலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் பங்களிப்பையும் புரிந்துணர்வையும் வேண்டுகின்றது.

முதலில் நான் எம்முடைய நாட்டிற்கு விஐயம் செய்யுமாறு தங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். எமது வரலாற்றின் வியப்பளிக்கும் இச்சந்தர்ப்பத்தில் எம்முடன் இணையுமாறும் எமது வரலாற்றை உலகத்திற்கு எடுத்து செல்லுமாறும் கோறுகின்றேன்.

இரண்டாவதாக வியாபாரத்தையும் முதலீட்டையும் அதிகரிப்பதன் மூலம் இலங்கைக்கு உதவி வழங்குங்கள். இலங்கையில் திறக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் மீது முதலீடு செய்யுமாறு தங்களுடைய தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குங்கள். இந்த நாட்டின் பொருளாதார நிலைமையின் மோசமான நிலைமையை குறைப்பதில் வேலை வாய்ப்பை உருவாக்குதல் முக்கியமான விடயமாகும். அதிகரித்த வியாபார மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் நல்லிணக்க நடைமுறைக்கு உதவும் முக்கியமான காரணிகளாகும் என்பதுடன் இவை இலங்கையின் நிலைபேறான வளர்ச்சிக்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்திற்கும் மிகவும் முக்கியமாகவுள்ள அதன் வெற்றியை உரிதிப்படுத்தும்.

மூன்றாவதாக மனித உரிமைகள் சமூகத்தையும் உள்ளடக்கி சர்வதேச சமூகத்தை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்திக் கூறுகின்றேன். இது எளிதில் முறியக்கூடிய இடைப்போக்குக்காலப் பகுதியாகவுள்ளது. இலங்கை அரசாங்கமானது அதன் பிரசைகள் யாபேரினதும் மனித உரிமைகளை மேன்படுத்துவதையும் பாதுகாப்பதையும் உரிதிப்படுத்துகின்ற வேளையில் சனநாயகத்தினதும் நல்லாட்சியினதும் சட்ட ஆட்சியினதும் பிரயாணமானது வெற்றியடைவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.

ஆனால் இப்பிரயாணத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சியகளினதும் பங்குபற்றுதல் அத்தியவசியமான ஓர் உணர்ச்சிபூர்வமான நடைமுறையாகும். இன்னும் இந்த நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சில கடும்போக்காளர்கள் இருக்கின்றனர். இவர்கள் இயல்பான காரணங்கள் நிமித்தம் இப்பிரயாணத்தை தடம்புரள வைக்க நினைக்கின்றனர். எனவே தேசிய நல்லிணக்கம், காயத்தை ஆற வைத்தல், நிறுவனரீதியான கட்டியெழுப்புகை மற்றும் உண்மையான இலங்கையர் என அடையாளப் படுத்தல் பற்றிய இந்த பிரயாணத்திற்கு ஆதரவு வழங்குகின்ற வேளையில் எமக்கு கால அவகாசத்தையும் இடைவெளியையும் வழங்குமாறும் நான் வலியுறுத்திக் கூறுகின்றேன்.

இறுதியாக எமது கதையிலிருந்து அர்த்தமுள்ளதும் ஏதாவது விடயத்தை எடுத்து கொள்ள கூடியதுமான விடயத்தையும் அதிலிருந்து உயர்ந்த எண்ணங்களை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கும் விசேடமாக திருப்பமுடியாத விரக்தி நிலமைகளாக தோன்றக்;கூடிய விடயத்தில் உள்ளவர்களுக்கு எமது நாட்டில் திரும்ப திரும்ப ஆண்டுதோறும் சிறிது காலத்துக்கு முன்னறும் கூட ஆட்சி ஆதிக்கக் கொள்கை அல்லது சிவில் குழப்ப நிலமைகள் இல்லாமல் செய்வதன் பொருட்டு அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். எமது கதையை சனநாயகத்தின் வாக்குச் சீட்டின் வலிமையிலும் நம்பிகை இழந்திருக்கக் கூடியவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். அவர்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X