2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மஹிந்த ராஜபக்ஷ மிதவைக்குடை வேட்பாளர்

Princiya Dixci   / 2015 ஜூலை 28 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையில் தேர்தலில் போட்டியிடாது மிதவைக்குடையில் (பெரசூட்) பறந்துவந்து குருநாகல் மாவட்டத்தில் கீழிறங்கி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரேயொரு முன்னாள் ஜனாதிபதி,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவே என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது இந்நாட்டில் இருந்த பிரதான அரசியல் கட்சியாகும். எனினும், அக்கட்சி இன்றிருக்கின்ற நிலைமையை பார்த்தால் மன்னிக்கத்தான் நினைக்கவேண்டியிருக்கின்றது. 

அக்கட்சியில் விசேடமான சிரேஷ்ட தலைவர்கள் இருக்கின்றனர். எனினும், அவர்கள் எல்லோரும் விமல் வீரவன்சவுக்கு அடிபணிந்துள்ளனர். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தற்போது மிகவும் பின்தங்கிய தேர்தல் பிரசாரங்களையே முன்னெடுத்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .