2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

சஜினின் மனு ஓகஸ்ட் 10 வரை ஒத்திவைப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சார்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்தமை மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அடிப்படை உரிமை மீறல் என அறிவிக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சார்ப்பில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சஜின் வாஸ் குணவர்தன, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணை இன்று திங்கட்கிழமை (03) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யவதற்கு  சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .