2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

50 கிலோ கிராம் பவர் ஜெல்லுடன் ஒருவர் கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பவர் ஜெல் எனப்படும் அதிக சக்திவாய்ந்த வெடிமருந்துடன் நபரொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை(04) காலை,  எல்ல இராவணாஎல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வெடிமருந்து அடங்கிய சுமார் 400 பொதிகள் கைப்பற்றப்பட்டதாகவும் வெடிமருந்தின் நிறை 50 கிலோகிராம் எனவும்பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 45 வயதுடையவர் எனவும் அவர், முல்கிரிகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எல்ல-வெல்லவாய வீதியில் பயணித்த வாகனங்களை பரிசோதித்த பொலிஸார்,  வெல்லவாய பஸ் டிப்போவுக்கு சொந்தமான, பண்டாரவளை நோக்கிச்சென்ற பஸ்ஸை சோதனைசெய்தபோது, குறித்த பஸ்ஸில் பயணித்த சந்தேகநபர் இரண்டு சீமெந்து பக்கற்றுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்திவாய்ந்த வெடிமருந்தை கொண்டு செல்கின்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வெடிமருந்தை மீட்டதுடன் சந்தேகநபரை கைதுசெய்யதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் எல்ல பொலிஸார் கூறினர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .