2021 மார்ச் 06, சனிக்கிழமை

வெளிநாட்டு பணத்துடன் ஒருவர் கைது

Gavitha   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிமுகப்படுத்தப்படாத பெருந்தொகையான வெளிநாட்டு பணத்துடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்த நபர் ஒருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது நேற்று செவ்வாய்க்கிழமை (04) செய்யதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு 130,000 சவுதி ரியாலை தன்வசம் வைத்திருந்துள்ளார். இது இலங்கை ரூபாவில் 4.5 மில்லியன் பெறுமதியானவை என்று சுங்க திணைக்கள் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

பிரயாணப்பைக்குள் மறைத்து வைத்து குறித்த வெளிநாட்டு பணத்தை கடத்த முற்பட்ட இவர் UL281 என்ற விமானத்தில்  சவுதி அரேபியா, ஜித்தாவுக்கு செல்லவிருந்தார் என்றும் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .