2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களை விசாரணைக்குட்படுத்த அனுமதி

Thipaan   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் இருவரையும் ஒரு மாதகாலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த சீ.ஐ.டீ.யினருக்கு ஹோமாகம நீதவான் அனுமதியளித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில், விசாரணைக்குட்படுத்தவே நீதவான் அனுமதியளித்துள்ளார்.

வவுனியாவில் வைத்து  கைதுசெய்யப்பட்ட இருவரும், சத்யா மாஸ்டர் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சுரேஷ் மற்றும் நகுலன் என்றழைக்கப்படும் சுமதிபாலன் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஒருமாதகாலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .