2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

உ/த பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் வழங்காததால் மாணவி தற்கொலை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என வவுனியா பொலிஸார் கூறினர்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரை, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலய அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .