2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

புளூமெண்டல் துப்பாக்கி சூடு:ஒருவர் கைது

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு புளூமெண்டல் வீதியில் ஜூலை 31ஆம் திகதி இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் காரையும் இனங்கண்டுள்ளதாக தெரிவித்தனர்.

அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து விதான கமகே அமில (28) என்பவரை ஓகஸ்ட் 6ஆம் திகதி கைது செய்ததாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி முஓ3149 என்ற கருப்பு நிறத்திலான ஹபிரட் வாகனத்திலேயே பயணித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஜூலை 31 ஆம் திகதி இடம் பெற்ற சம்பவத்தில் பெண்ணொருவரும் நபரொருவரும் பலியானதுடன் மேலும் 11பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .