Gavitha / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேசியாவின் ஷா அலம் மாவட்டத்தின் கொட்டா கெமுனிங்கிலுள்ள வீட்டுத்தொகுதியில், ஒருவீட்டை உடைத்து உள்ளே நுழையும் போது தாக்குதலுக்குள்ளாகி மரணமான இலங்கையரின் மரணம் தொடர்பில் மலேசிய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் எழுவரை கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர், வீட்டின் கதவை உடைத்து திறக்கமுற்பட்டபோது, வீட்டில் வசித்தவர் அவரைப்பிடிக்கத் துரத்தியுள்ளார்.
வீட்டுத் தொகுதியில் வசித்த பலரும் இவரைத் துரத்திப்பிடித்து அடித்தனர் என பொலிஸ் அதிகாரி ஷாபியன் மமத், ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் ஏழுபேரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago