2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சு.க சிரேஷ்டர்களின் ஆதரவு மஹிந்தவுக்கு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமராக்குவோம் என தான் உட்பட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் கைச்சாத்திட்டுள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவரும், மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கத்திலேயே உள்ளனர் என்றும் அது தொடர்பில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .