2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

'வாக்காளர்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை'

Gavitha   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக, வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளிக்கச் செல்லும் வாக்காளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பது குறித்து அதிகாரிகள் உறுதியாகவும் அவதானமாகவும் இருத்தல் அவசியம் என்று  மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று தெரிவித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு தேர்தல் வன்முறைகளும் முறைக்கேடான தேர்தல் பிரசாரங்களும் இடம்பெற்றுள்ளதாக, உள்ளூர் கண்காணிப்பு குழுக்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களை கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது, கட்சி ஆதாரவாளர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துடவது போன்றவை நடைபெறாமல் இருப்பதற்கும் வாக்களிப்போருக்கு எவ்வித பாதிப்பு ஏற்டாமல் இருப்பதற்கும் அதிகாரிகள் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ளல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தேர்தல்கள் ஆணையகமும் பாதுகாப்பு பிரிவினரும் தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு அவர்களது ஆக்கப்பூர்வமானதும் நடுநிலையானதுமான பங்களிப்பை வழங்கியிருந்தனர். அதே போன்ற பாரபட்சமற்ற ஒரு பங்களிப்பை இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் வழங்க வேண்டும் என்றும் வாக்காளர்களது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறித்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .