Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
32 வயதான தந்தை மற்றும் முறையே 12,8 மற்றும் 5 வயதுகளுடைய மகள்மார்கள் மூவருமே இவ்வாறு காப்பாற்றப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அந்த நால்வரும் தியத்தலாவை உனகந்தையில் உள்ள தங்களுடைய வீட்டிலிருந்து பஸ்ஸொன்றில் ராவண எல்ல நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
ராவணா எல்லயின் நீர்வீழ்ச்சிக்கு அருகில் அந்த நால்வரும் சென்றுகொண்டிருந்த போது அவ்விடத்தில் இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்துள்ளான். அவனிடமிருந்த அலைபேசியை அவர்கள் வாங்கியுள்ளனர்.
அந்த அலைபேசியின் ஊடாக தங்களுடைய அம்மாவுடன் தொடர்பினை ஏற்படுத்திய பிள்ளைகள் மூவரும், தாங்கள் தற்கொலை செய்துகொள்ள போவதாக அறிவித்துள்ளனர்.
சில விநாடிகளுக்கு பின்னர் அந்த இளைஞனின் அலைபேசிக்கு அழைப்பை எடுத்த தாய், தயவுசெய்து அந்த மூவரையும் நீர்வீழ்ச்சியிலிருந்து குதிப்பதற்கு விடவேண்டாம் என்று மன்றாடியுள்ளார்.
நிலைமையை புரிந்துகொண்ட இளைஞன், மற்றொரு இளைஞனின் உதவியுடன் பிள்ளைகள் மூவர் உட்பட நால்வரையும் காப்பாற்றி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே அந்த நால்வரும் தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சிசெய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
58 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago