2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சுசில், அநுரவின் வீட்டுக் கதவுகளில் நோட்டீஸ்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை அப்பதவிகளிலிருந்து நீக்குவதாக மாவட்ட நீதிமன்றம் விடுத்த உத்தரவின் பிரதியை அவர்களது வீடுகளின் கதவுகளில் ஒட்டுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை (17) உத்தரவு பிறப்பித்தது. 

குறித்த பதவிகளிலிருந்து மேற்படி இருவரையும் நீக்குவதற்கான இடைக்கால தடையுத்தரவு அடங்கிய நோட்டீஸை அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்தே மேல் நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .