2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

உள்ளூர்க் கண்காணிப்பாளர்களையே பயன்படுத்துங்கள்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 19 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கோபிகிருஷ்ணா

இலங்கையில் இடம்பெறும் தேர்தலுக்கு உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களை பயன்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்குவதாக, தெற்காசியாவின் தேர்தல் முகாமைத்துவச் சபைகளின் மன்றத்தின் தலைவரும் மாலைதீவுகளின் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான இப்ராஹிம் வாஹீட் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட இவ்வமைப்பின் அவதானங்களை வெளிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

நடந்து முடிந்த இத்தேர்தலானது நீதியாகவும் நியாயமாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான பாராட்டு தேர்தல்கள் பணிப்பாளருக்குச் செல்ல வேண்டுமெனக் ககூறினார். அதைவிட, முக்கியமான பாராட்டு, இலங்கையின் மக்களுக்குச் செல்ல வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த தேர்தலானது, சர்வதேச நியமங்களின் அடிப்படையின் படி நீதியானதாக இடம்பெற்று முடிந்ததாகக் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள், பொலிஸார், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் மாத்திரமன்றி, மக்களும் தாங்கள் எவ்வாறு ஒழுக்கனமாவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னேறக்கூடிய விடயங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், மக்கள், அரசியல்வாதிகள் உட்பட அனைவரிடமும் சிறிது அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என எண்ணுவதாகக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .