Gavitha / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை முதலில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சத்தியப்பிரமாணம் இன்று திங்கட்கிழமை அல்லது நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறலாம் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த அமைச்சரவையில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த 17 அமைச்சர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த 13 அமைச்சர்களும் என மொத்தமாக 30 பேர் அங்கம் வகிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக இராஜங்க அமைச்சர்கள் 10 பேரும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து ஆட்சியமைக்கவுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 50க்கும் அதிகமாகும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதனால் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிகை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
12 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
33 minute ago