Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுக ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை (15) பிற்பகல் 2 மணிக்கு முன்னர் சேவைக்குத் திரும்பவேண்டும் என்றும் அவ்வாறு சேவைக்குத் திரும்பாத ஊழியர்கள், சேவையை விட்டு விலகிச் சென்றவர்களாகவே கருதப்படுவார்கள் என, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அறிவித்தார்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன், நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இன்று (15) பிற்பகல் 2 மணிக்குள் சேவையில் இணைந்துகொள்ளும் ஊழியர்கள், எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கை - சீனா நிறுவன அபிவிருத்தித் திட்டங்களின் போது, நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். மாகம்புர துறைமுகத்தில் கடமையாற்றும் 483 ஊழியர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago