Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
'லங்கா' பத்திரிகையின் பிரதிகளை சட்டவிரோதமான முறையில் அச்சிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பத்திரிகை நிறுவனத்திலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் உட்பட ஐந்து பேர் நேற்று வியாழக்கிழமை இரவு கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் தேடுதல் உத்தரவுக்கமைய, ரத்மலானை, கருவாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அச்சகத்தை சுற்றிவளைத்த பொலிஸார், சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 20,400 பிரதிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்களையும் கைது செய்தள்ளனர்.
அத்துடன், குறித்த பிரதிகளை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago