Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 24 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 2,079 படைவீரர்கள் இந்த வருடம் மூன்றாவது குழந்தை பிறந்தபோது 100,000 ரூபா அலவன்ஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கமைய 1,250 இராணுவத்தினர், 329 கடற்படைவீரர்கள், 500 விமானப்படைவீரர்கள் இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அரசாங்கத் தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன இதனைக் கூறினார்.
இதனால் பயனடைந்தவர்களின் பெயர்ப்பட்டியல் வழங்க இன்னும் ஒரு மாதகால அவகாசம் தேவைப்படுவதாகவும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட படைவீரர்களுக்கு இந்த அலவன்ஸ் வழங்கப்படுவதாகவிருந்தால், ஏன் அவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லையென ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அரசாங்கத் தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன, பட்டியலை தொகுப்பதற்கு அவகாசம் தேவையாகவுள்ளதாகவும் கூறினார்.
'நாங்கள் பட்டியலை வழங்க மறுப்புத் தெரிவிக்கவில்லை. கால அவகாசம் மாத்திரமே தேவையென நாங்கள் கேட்கிறோம். இது நீண்டதொரு ஆவணம். பதிலளிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு துண்டுக் கடதாசியும் நாடாளுமன்றத்திற்கு செலவை ஏற்படுத்துகின்றது' என அவர் கூறினார். (Kelum Bandara and Yohan Perera)
kalmunaiyaan Thursday, 24 November 2011 10:08 PM
இதன் மானசீக நோக்கம் என்ன?
Reply : 0 0
சிறாஜ் Thursday, 24 November 2011 10:40 PM
நேற்றுதான் அறிவித்தார்கள் இன்றைக்கே குழந்தை பிறந்து விட்டதா?
கோவிந்தா கோவிந்தா...................
Reply : 0 0
Dilan Thursday, 24 November 2011 10:46 PM
@சிறாஜ், கடந்த வருடம் முப்படையினருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாது. இம்முறை பொலிஸாருக்கும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வருட பட்ஜெட் அறிவிப்பின்படி இவ்வருடமும் அக்கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago