Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சேவானி சியோன், கிரிசான் ஜீவக ஜெயருக்)
சவூதி அரேபிய எஜமானரால் உடம்பினுள் 21 ஆணிகள் ஏற்றப்பட்ட பணிப் பெண்ணுக்கு பாரிய சத்திர சிகிச்சை நாளை நடைபெறவுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பணிப் பெண்ணின் வாக்குமூலம் மற்றும் படங்கள் உள்ளடங்கிய ஆவணமொன்றை வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி அரேபிய தூதுவராலயத்திற்கும் வழங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
"நாங்கள் ஆவணத்தை நிறைவு செய்து அதை அரபு மொழிக்கும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை நாளை வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி அரேபிய தூதுவராலயத்திடமும் கையளிக்கவுள்ளோம்" என அவர் கூறினார்.
கம்புருப்பிட்டியவில் உள்ள அந்தப்பன தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் கமல் வீரதுங்க கூறுகையில், இவ்வாறான ஒரு சிகிச்சை சிவிலியன் ஒருவருக்கு மேற்கொள்வது முதற் தடவையாகும். அத்துடன் அந்தப்பன வைத்தியசாலையில் இவ்வாறான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் முதற் தடவையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .