Suganthini Ratnam / 2011 ஜூன் 23 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி கைதுசெய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களென இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
'உரிய சட்ட நடைமுறைகளின் பின்னர் இவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது' என இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
'மீனவர்கள் மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுகிறார்கள். மீனவர்களையும் படகுகளையும் சட்ட நடைமுறைகள் பூர்த்தியானவுடன் திருப்பியனுப்புவதற்கு இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 20ஆம் திகதி தலைமன்னாருக்கு அருகில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என இலங்கைத் தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படகுகள் இருக்கும் இடங்களை கண்டறிய உதவும் ஜி.பி.எஸ். கருவிகள் படகுகளில் பொருத்தப்பட்டிருந்தபோதிலும், அப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் காணப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
54 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
54 minute ago
2 hours ago