2026 மே 19, செவ்வாய்க்கிழமை

’’அய்யோ வாய்த்தவறி சொல்லிட்டேன்’’ ’F’ (வீடியோ)

Mayu   / 2026 மே 19 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 'காக்டெய்ல் 2' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தனது சக நடிகை கிருத்தி சனோனின் அதிர்ச்சியூட்டும் அழகைப் பாராட்டும் போது நடிகை ராஷ்மிகா மந்தனா வாய்தவறிப் பயன்படுத்திய ஒரு வார்த்தை, திரையரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

 

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா, கிருத்தி சனோன், ஷாஹித் கபூர் ஆகியோருடன் தயாரிப்பாளர் தினேஷ் விஜன், இயக்குனர் ஹோமி அதாஜானியா மற்றும் இசையமைப்பாளர் பிரீதம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் ஊடகங்கள் மத்தியில் பேசிய ராஷ்மிகா, கிருத்தி சனோனைப் பார்த்து:"நீங்கள் மிகவும் அழகாக (Hot) இருக்கிறீர்கள் என்பது இந்த உலகத்திற்கே தெரியும்... அதுமட்டுமல்ல, நீங்கள் நிஜமாகவே 'F****** hot' ஆக இருக்கிறீர்கள்!" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

தான் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்த அடுத்த கணமே, அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா உடனடியாகத் தனது வாயைப் பொத்திக்கொண்டார். பின்னர் சிரித்துக்கொண்டே, "ஓ! என்னை மன்னித்துவிடுங்கள்! அந்த வார்த்தையை 'சைலன்ஸ்' (Mute) செய்துவிடுங்கள்!" என்று கூற, அரங்கமே ரசிகர்களின் கூச்சலாலும் சிரிப்பொலியாலும் நிறைந்தது.

கிருத்தி மீதான தனது அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்திய ராஷ்மிகா, படப்பிடிப்புத் தளத்தில் தங்களுக்குள் இருந்த நெருக்கம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். 

"நானும் ஷாஹித் கபூரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், 'காக்டெய்ல் 2' படத்தில் எங்களுடைய ஒட்டுமொத்தக் கூட்டணியும், திரையில் உள்ள 'கெமிஸ்ட்ரி'யும் முற்றிலும் வித்தியாசமானது; மிகவும் மாயாஜாலமானது."

குறித்த 'காக்டெய்ல் 2' திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X