Janu / 2026 மே 19 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா போக்குவரத்துச் சபையின் (SLTB) துணை நிறுவனமான 'மெட்ரோ ட்ரான்சிட்' நிறுவனத்திற்காக 104 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம், பத்தரமுல்ல கொஸ்வத்தையிலுள்ள போக்குவரத்து அமைச்சில் திங்கட்கிழமை(18) கையெழுத்திடப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் 'இந்த்ரா டிரேடர்ஸ்' (Indra Traders) நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வில் அமைச்சு சார்பாக அதன் செயலாளர் பேராசிரியர் கபில சி. கே. பெரேராவும், இந்த்ரா டிரேடர்ஸ் தனியார் நிறுவனம் சார்பாக அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக, இந்த 104 பேருந்துகளும் ஒப்பந்தத்தின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன.
கையெழுத்திட்ட நிகழ்வில் மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பி. எம். பியதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

15 minute ago
20 minute ago
30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
30 minute ago
39 minute ago