2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

இந்திய விமானப்படைத் தளபதி வந்தடைந்தார்

Editorial   / 2026 மே 19 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் (Air Chief Marshal Amar Preet Singh), மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இரவு (18) இலங்கை வந்தடைந்தார். அவர் எதிர்வரும் மே 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வந்தடைந்த அவர், இன்று காலை பத்தரமுல்லவில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்திற்குச் சென்று, போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள விமானப்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை, இலங்கை விமானப்படையினர்   அணிவகுப்பு மரியாதையுடன் மிக கோலாகலமாக வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றது.

விமானப்படைத் தளபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்பு உறவுகளையும், பரஸ்பர நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தனது இந்த மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, அவர் கண்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன், இலங்கை இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X