Suganthini Ratnam / 2011 ஜூன் 21 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடித்தபோது கைதுசெய்யப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த 23 இந்திய மீனவர்களும் அவர்களின் 5 படகுகளும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோஷல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கடற்படையினரின் விசாரணையையடுத்து 23 இந்திய மீனவர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக டெய்லிமிரருக்கு அவர் கூறினார்.
இம்மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் ஜூலை முதலாம் ஆம்திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னர் நீதவான் திருமதி கே ஜீவராணி உத்தரவிட்டார்.
(காந்த்ய சேனாநாயக்க, சுபுன் டயஸ், எஸ்.ஜெனி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .