Super User / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொடையில் கடந்த வெள்ளிக்கிழமை 7 கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 25 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை தனியார் வங்கியொன்றின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களில் வைப்பதற்காக வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்ட 7 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதபாணிகளான 6 நபர்கள் வாகனத்தை நிறுத்தி வங்கியின் பணத்தையும் பாதுகாப்பு ஊழியர்களின் துப்பாக்கிகளையும் கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் பணிப்பின் பேரில் 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
10 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 Jan 2026