2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆஸி. சென்ற 25பேர் நாடு திரும்பினர்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற நிலையில் அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 25பேர் நேற்றிரவு நாடு திரும்பினர்.
 
சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த 25பேரில் 22 தமிழர்கள், இரு சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம் நபர் ஒருவர் அடங்குவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அகதிகள் தொடர்பான சர்வதேச அமைப்பினால் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X