Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 17 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 26ஆம் திகதியன்று, கொழும்பில் கோவணத்துடன் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கான மானியம் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் செய்தல், உரமானியத்தை உரிய முறையில் வழங்காமை, அறுவடைக்கு உரிய விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடங்கிய நாடளாவிய ரீதியில் உள்ள சகல பிரதேசங்களையும் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்பர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டை ரயில்வே நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, மகஜரொன்றையும் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில், மாவட்ட ரீதியில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago
04 Mar 2021