2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த 26 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணித்துக்கொண்டிருந்ததாகக்  கூறப்படும் 26 இலங்கைத் தமிழர்களை அந்தமான் கரையோரத்திற்கு அப்பால் கைதுசெய்த இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினர், அவர்களை இலங்கைக்கு இன்று காலை திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேற்படி 26 பேரும் அந்தமான் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் பின்னர் அந்தமான் பொலிஸார் இவர்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 இலங்கையர்களுடன் பயணித்த இப்படகை 02 நாட்களுக்கு முன்னர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரையோர பாதுகாப்புப் பிரிவினர் இடைமறித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாம் வேலை தேடி அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றதாகவும் இப்பயணத்திற்காக இலட்சக்கணக்கில்  படகு இயக்குநரிடம் பணம் வழங்கியதாகவும் விசாரணையின்போது இவர்கள் கூறியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .