2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பட்டாசு வெடிக்க வைக்க முயன்றபோது 26 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

பெலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள ஸ்ரீசுதர்சனராம விகாரையின் கொங்கிறீட் தளமொன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு முறையாக வெடிக்காமல் அந்த கொங்கிறீட் தளம் உடைந்ததால் 26 பேர்; காயமடைந்துள்ளனர்.

குறித்த விகாரையில் நேற்று சனிக்கிழமை  வருடாந்த பெரஹரா நடைபெற்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

காயமடைந்த 26 பேரும் உடனடியாக ஹத்போதிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இவர்களில் 8 பேர் மாத்தறை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அதேவேளை, 9 பேர் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சையின் பின்னர்  3 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X