2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவுக்கு எதிரான 3 வழக்குகள் ஜூலை 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Super User   / 2010 ஜூலை 12 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டி.பாருக் தாஜுதீன்)

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான மூன்று வழக்குகளை கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி எதிர்வரும் 27 ஆம் திகதிவரை இன்று ஒத்திவைத்தார்.

வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டியளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில்  ட்ரையல் அட்பார் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார கூறினார்.

இதேவேளை சரத் பொன்சேகாவும் அவரின்  அந்தரங்கச் செயலர் சேனக ஹரிப்பிரியவும் இராணுவத்திலிருந்து தப்பியோடியோரை சட்டவிரோதமாக தங்க வைத்திருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் புதிய மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக  வெற்றிகரமாக படைநடவடிக்கையை மேற்கொண்டு நாட்டுக்கு வெற்றியீட்டிக் கொடுத்த ஜெனரல் சரத் பொன்சேகா மீது நியாயமற்ற வகையில் குற்றம் சுமத்தப்படுவதாக அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நளின் லுடுவாஹெட்டி தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கும் ஜூலை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--