Janu / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் காட்சிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட "தேவ்னிமோரி" புனித சின்னங்கள், புதன்கிழமை (11) காலை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
இப்புனித சின்னங்களை இலங்கைக்குக் கொண்டு வந்த, இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130 ரக விசேட விமானம், புதன்கிழமை (11) காலை 11.15 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டது.
இப்புனித சின்னங்களை அனுப்பி வைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
டி.கே.ஜி. கபில
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago