2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மருத்துவரிடம் 3 மில்லியன் ரூபாய் கொள்ளை

A.P.Mathan   / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருநாகல் எல்லை பகுதியில் ரிதீகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று மாலை மருத்துவர் ஒருவரிடம் 30 லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.

குருநாகல் பாணகமுவ பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற பணத்தை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபரொருவர் குறித்த மருத்துவரை வழி மறித்து பையுடன் பணத்தை பறித்துச் சென்றுள்ளதாக அவர் ரிதீகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ரிதீகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .