2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

300 இலங்கையர்களை 16 ஆம் திகதி நாடு கடத்த பிரிட்டன் தீர்மானம்

Super User   / 2011 ஜூன் 08 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சேதுராமன்)

சுமார் 300 இலங்கையர்கள் பிரிட்டனிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி நாடு கடத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் 300 இலங்கையர்களை பிரிட்டனிலிருந்து வெளியேற்றுவதற்காக பிரிட்டனின் எல்லை முகவரகம் விசேட விமானமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய வட்டாரங்கள் தமிழ் மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை வழக்குரைஞரான நிஷான் பரம்ஜோதி இது தொடர்பாக தமிழ் மிரருக்குத் தெரிவிக்கையில் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கும் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் இந்த வெளியேற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் எனத் தெரிய வருவதாகவும் அவர் தமிழ் மிரருக்கத் தெரிவித்தார்.
தம்மை நாடுகடத்துவதிலிருந்து தடுப்பதற்கு கடைசிநேர பிரயத்தனங்களில் மேற்படி இலங்கையர்கள் ஈடுபட்டுள்ளனர். 

எனினும் மேற்படி விமானம் ஜூன் 16 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு பிரிட்டனிலிருந்து புறப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1980 களின் முற்பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் பிரிட்டனுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். கனடாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான புலம்பெயர்ந்த தமிழர்களை கொண்ட நாடாக பிரிட்டன் உள்ளது. அங்கு சுமார் 120,000 இலங்கைத் தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 


  Comments - 0

 • Nirmalalraj Thursday, 09 June 2011 04:32 PM

  பிரிட்டன் இரட்டை வேடம் போடுகிறதா?

  Reply : 0       0

  Thilak Thursday, 09 June 2011 06:58 PM

  இலங்கை திரும்பியவுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

  Reply : 0       0

  thamilan Thursday, 09 June 2011 07:20 PM

  இவர்களின் பெயர் விபரங்களை எங்கு பெற முடியும்?

  Reply : 0       0

  Saratha Thursday, 09 June 2011 10:15 PM

  எத்தனை லட்சம் செலவிட்டு போனார்களோ?

  Reply : 0       0

  siddeek Friday, 10 June 2011 10:15 PM

  எல்லாம் வாங்க , வந்து தாய் நாட்டை முன்னேற்றுங்கள் ,எத்தனை பேரு !!!!!!!!!!!. அங்கே இருந்து பணம் அனுப்பி புலிகளை வளரவிடவா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X