2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ரூ. 34 இலட்சம் பெறுமதியான மதுபானம் கைப்பற்றப்பட்டது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 34 இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானத்தை அம்பாறை கலால் திணைக்கள அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு ஏனைய பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.

இது குறித்து பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் போதரகம தலைமையிலான குழுவினரே இச்சட்டவிரோத மதுபானங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோதமான மதுபானங்களை ஏனைய பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி ஆணையாளர் மேலும் தெரிவித்தார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X