Suganthini Ratnam / 2011 நவம்பர் 24 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி இந்திய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி; பாரிஸுக்கு பயணமாகவிருந்ததாகத் தெரிவிக்கப்படும் பெண்ணொருவர் உட்பட இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் இந்திரகாந்தி விமான நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் பயணமாகவிருந்த பெண் முகவரொருவர் பற்றிய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பஹ்ரெய்னூடாக பாரிஸ் பயணமாகவிருந்த இந்தப் பயணிகளின் பயணப் பத்திரங்களை குடியகல்வு அதிகாரிகள் பார்வையிட்டபோது, இவை போலியானவையென கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் தம்மை சுமன் ராஜசேகர், தேவநேசன் ஜெயா, நீலகண்டன் ராமசாமி, பால்ராஜ் குமார் என அடையாளப்படுத்தினர் .
இவர்கள் மீது தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களின் பயணத்தை விஜயலலிதா என்னும் பெண் முகவரொருவர் ஒழுங்கு செய்ததாக தெரியவந்துள்ளது. விமானசேவை உத்தியோகத்தர்கள் சிலரும் இது தொடர்பில் விசாரிக்கப்படவுள்ளனர். ( The Hindu)
14 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago