2021 மே 08, சனிக்கிழமை

மிருக பலிப் பூஜையை சனல் 4 போன்றவை ஒளிபரப்பினால் காட்டுமிராண்டிகளின் நாடு என்பார்கள்: அமைச்சர் மேர்வ

Super User   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நாடியா பஸ்லுல்லாஹ்)

முன்னேஸ்வரம் காளி கோவில் மிருக பலியை வெளிநாட்டு இணையத்தளங்களும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஒளிபரப்பினால், அவர்கள் இலங்கையை காட்டுமிராண்டிகளின் நாடு எனக் கூறுவார்கள். அதனால்தான் நான் அதை தடுத்தேன்' என பொதுமக்கள் உறவுகள், பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

தான் செய்தது ஒரு மெச்சத் தகுந்த செயல் என்பதால் தன்னை தண்டிக்க வேண்டாம் என காளி அம்மனிடம் தான் வேண்டியதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.

தமிழ் மிரரின் சகோதர ஆங்கில வார இதழான சண்டே டைம்ஸுக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மிருக பலியை நான் வெறுக்கிறேன். ஒருவராலும் இதை நிறுத்த முடியாதிருந்தது. தேங்காய் எறிபவர்களுக்கும் நாக்கில் துளையிடுபவர்களுக்கும் நான் சவால் விடுக்கிறேன். எந்த மதமும் குரூரமான மிருக பலியை அனுமதிக்கவில்லை. விசேடமாக இந்து மதம் அனுமதிக்கவில்லை' என அவர் கூறினார்.

முன்னேஸ்வரம் காளி கோவில் மிருக பலியை தடுத்தமை, தரம் குறைந்த சீனி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியத்தை முற்றுகையிட்டமை, வரி சேகரிக்கச் சென்ற உத்தியோகஸ்தர்களுடன் இணைந்துகொண்டமை, களினி பகுதியில் விடுதிகளை சோதனையிட்டமை என மீண்டும் பரபரப்பாக செய்திகளில் இடம்பெற ஆரம்பித்துள்ளார் அமைச்சர் மேர்வின் சில்வா.

இது குறித்து மேர்வின் சில்வா கூறுகையில், "எனது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னால் புறக்கணிக்க முடியாது. ஏனைய அனைவரும் பேசிக்கொண்டிருககும்போது நான் செயற்படுகிறேன். தேவையானால் சட்ட அமுலாக்கல் உத்தியோகஸ்தர் பாத்திரத்தை ஏற்கவும் நான் தயார்" எனக் கூறினார்.
 


  Comments - 0

 • ilakijan Monday, 26 September 2011 12:21 AM

  மனித பலி கொடுக்கும் புனித சிறிலங்காவில் மிருக பலி காட்டுமிரண்டித்தனம்தான் !

  Reply : 0       0

  manithan Monday, 26 September 2011 04:45 PM

  என்ன இது இந்த காமெடி பீஸு ஹீரோவாக டிரை பண்ணுது... டைரக்டர் ஸ்கிரிப்ட மாத்திட்டாரா?

  Reply : 0       0

  xlntgson Monday, 26 September 2011 09:11 PM

  எதைத்தான் மேற்கைத் தவிர்த்த மற்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை நாகரிகமாகக் காட்டினார்கள், நமது தலைவர்கள் படத்தைக் கூட முக்கிக்கொண்டு இருக்கிறமாதிரிப் போடுவார்கள் மேற்கின் தலைவர்கள். மனைவியர் பிள்ளைகள் படங்களில் அவர்களெல்லாம் சிரித்துக்கொண்டு இருக்கின்ற மாதிரி! நன்கு கவனியுங்கள் வித்தியாசத்தை இல்லாவிட்டால் உங்கள் உள்மனத்தில் எழும் உணர்ச்சி அலைகளை உங்களது தலைவர்களை நீங்களே வெறுக்கப் பண்ணும் கலையை அறிய மாட்டீர்கள், வாசம் அவர்களுக்கு நாற்றம் எங்களுக்கு நேர்மறை +ve அவர்களுக்கு எமக்கெல்லாம் எதிர் -ve.

  Reply : 0       0

  zeenet Monday, 26 September 2011 09:31 PM

  இலங்கை ஒரு பெளத்த நாடே தவிர பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான நாடு இல்லை. இது பல்லின மக்கள் வாழும் நாடு ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய மதத்தினை பின்பற்றவும் தனது மதம் சார்ந்த அனுஷ்ட்டானங்களை நிறைவேற்றவும் இந்நாட்டில் மத சுதந்திரம் உண்டு. இதனை தடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.

  Reply : 0       0

  dexter fernando Monday, 26 September 2011 11:31 PM

  We can't change the cultural aspects of HINDU Community at one's. all the tamil parties are responsible for this and they should take a action regarding this.

  Reply : 0       0

  oru muslim sagotharan Tuesday, 27 September 2011 05:34 AM

  இப்படிப்பட்ட அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கிறார் என்றால் சிந்திக்க வேண்டியுள்ளது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X