Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
தனது நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் தவிக்க விட்டு கணவனின் சகோதரர் ஒருவருடன் இரண்டு மாதங்களுக்கு முன் சென்ற தாயையும் அவரது மைத்துனரையும் அலவத்துகொடை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கண்டி, ரங்கலை பொலிஸ் பிரிவில் வசித்த இக்குடும்பத் தாய் தனது மைத்துனருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததுடன் எவருக்கும் தெரியாமல் இரண்டு மாதங்களுக்கு முன், தனது நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு பஸ் வண்டி ஒன்றில் சில தூரம் சென்ற பின் அவர்களை பஸ்ஸில் தவிக்கவிட்டு தனது கணவரின் சகோதரருடன் ஓடிச்சென்றுள்ளார்.
சில நேரம் சென்ற பின் பஸ்ஸின் ஊழியர்களுக்கு சந்தேகம் வந்து விசாரித்த போது தாய் வெகு தூரம் சென்றிருந்தார். இது சம்பந்தமாக பொலிஸில் புகார் செய்து விசாரணை நடத்திய போதும் அவ்வேளையில் தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும், நேற்றுக்காலை அலவத்துகொடை நகரில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதத்தில் நடமாடிய இருவரை கைது செய்து விசாரித்த போது இத்தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்படி பெண், பஸ்ஸில் கைவிட்டு சென்ற பிள்ளைகள் தலா 11,09,07, மற்றும் 05 வயதுடையவர்களென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்நான்கு குழந்தைகளும் தற்போது சிறுவர் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட தாயையும் அவரது மைத்துனரையும் பன்விலை நீதிமன்றம் முன் ஆஜர் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
15 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago
xlntgson Friday, 27 August 2010 09:04 PM
மைத்துனர் தனது சகோதரரின் பிள்ளைகளை தனது பிள்ளைகளாக கருதவில்லை என்றால் மறுமணம் மாற்றாந்தாய் மனப்பான்மை எல்லாம் வெறும் வார்த்தைகள் தான் போலும். இதில் மைத்துனரை கடுமையாக தண்டிக்க வேண்டுமா அந்த தாயை கடுமையாக தண்டிக்க வேண்டுமா என்று சட்டமே கூட தயங்கும். எப்படியான நம்பிக்கை மோசம்! அண்ணன் தம்பி பாசமும் இல்லை, சகோதரனின் மனைவி என்ற பயமும் இல்லை. சமுதாயம் சீரடைய சிந்தனை மட்டுமல்ல, செயலும் தீவிரமடைய வேண்டும். சீக்கியர்களிலும் இன்னும் சில இந்து இனங்களிலும் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ, பாஞ்சாலியும் பத்தினி என்பர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago