2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 40 தமிழர்கள் இலங்கை வந்தனர்

Super User   / 2011 ஜூன் 17 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 40 பேர் இன்று காலை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் விசேட குழுவினர் வாக்குமூலங்களைப் பெற்றுவருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்..

'நாம் தற்போது அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று வருகிறோம். இந்நடைமுறை முடிந்தவுடன் அவர்கள் வீடு செல்வற்கு அனுமதிக்கப்படுவர்' என அவர் கூறினார்.

பிரிட்டனில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மேற்படி 40 பேரும் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் பிரித்தானிய நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு விசேட விமானமொன்றின் மூலம் பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்டனர்.  அவர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .