2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

'பட்டினி'யில் இலங்கைக்கு 43 ஆவது இடம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பட்டினி'யில் ஆபத்தான நிலையில் தற்போதும் இலங்கை உள்ளதாகவும் 2013 பட்டினி சுட்டியில் இலங்கை 43 ஆவது இடத்திலுள்ளது என்றும் அந்த சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்மட்டத்திலிருந்து முன்னேறி உலக பட்டினி சுட்டி  2013 இல் 63 ஆம் இடத்துக்கு வந்துள்ள இந்தியாவில் பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனினும் அது சீன, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கீழேயே உள்ளது.

உலக பட்டினி சுட்டியில் சீனா,பட்டினி மட்டத்தில் 6ஆம் இடத்தில் உள்ளது. இலங்கை 43 ஆவது, பாகிஸ்தான் 57ஆவது, பங்களாதேஷ் 58 ஆவது இடங்களை பெற்று கடுமையான பட்டினி மட்டத்திலிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சுட்டி 120 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டினி மட்டத்தை காட்டுகின்றது. இந்த சுட்டியை தயாரிக்கும் போது மந்த போஷனை உடையோரின் விகிதாசாரம்இ ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் நிறை குறைந்த பிள்ளைகளின் விகிதாசாரம்இ ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் மரண வீதம் ஆகிய மூன்றும் சம அளவில் கருத்தில் எடுக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--