2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கலால் திணைக்களத்தினால் கடந்த வாரம் 43பேர் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

நாடு முழுவதிலும் கடந்த வாரம் கலால் வரித் திணைக்களம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 43பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் சட்டவிரோதமாக சாரயத்தை விநியோகம் செய்ததாகவும் 13 பேர் அனுமதிப்பத்திரமின்றி மதுசாரம் விநியோகம் செய்ததாகவும்   8 பேர் பியர் மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்ததாகவும்  மற்றும் 9 பேர் சாராயம் விற்பனை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாவனல்லை, கேகாலை, துல்ஹிரியா, பண்டாரவளை, உனவட்டுன, பலப்பிட்டிய, பதுளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 400,000 ரூபாவாகும். நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சட்டவிரோத வியாபாரம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கிணங்க உபுல் செனவிரட்ன தலைமையிலான குழுவே இந்த விசாரணைகளை மேற்கொண்டது.

400,000 ரூபா பெறுமதியான மதுபான வகைகளும் கைப்பற்றப்பட்டன. குறிப்பிட்ட வசிப்பாளர்களினால் சட்டவிரோத வியாபாரம் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டி கலால் திணைக்கள ஆணையாளர் வஸந்த ஹப்பு ஆராச்சியிடம் முறைப்பாடுகள் மேற்கொள்ள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கொழும்பு விசேட கலால் திணைக்கள பிரிவு தலைவர் எஸ்.ஈ.செனவிரட்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--